அக்கா கணவனுடன் அடிக்கடி தொலைபேசியில் சிணுக்கம்: கழுத்தறுத்து கொன்ற கணவன்!

Date:

அக்காவின் கணவருடன் அடிக்கடி தொலைபேசியில் பேசிய மனைவியில் சந்தேகமடைந்து, அவரது கழுத்தறுத்து கணவனே கொலை செய்துள்ளார்.

பின்னர், மனைவியின் சகோதரனுக்கு அழைப்பேற்படுத்தி விடயத்தை தெரிவித்து விட்டு, பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

சென்னை கிண்டி லேபர் காலனியை சேர்ந்தவர் நித்யானந்தன் (34). டிரைவர். இவருக்கும், புவனேஸ்வரி (23) என்பவருக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது.

இந்நிலையில் புவனேஸ்வரி தன் அக்கா கணவருடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்ததாக தெரிகிறது. இதனால் புவனேஸ்வரி நடத்தையில் சந்தேகப்பட்ட நித்யானந்தன் செல்போனில் பேசுவதை நிறுத்துமாறு மனைவியிடம் கூறியுள்ளார்.

ஆனாலும், புவனேஸ்வரி தொடர்ந்து செல்போனில் பேசி வந்துள்ளார். இதனால் தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த நித்யானந்தன் நேற்று தனது மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்தார்.

பின்னர் தனது மச்சானுக்கு போன் செய்து ‘உனது தங்கையை கொன்று விட்டேன்’ என்று கூறிவிட்டு கிண்டி காவல் நிலையத்தில் சரணடைந்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து புவனேஸ்வரியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து நித்தியானந்தனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் சென்னை கிண்டி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

spot_imgspot_img

More like this
Related

இலங்கையில் 10 சதவீதப் பிறப்புகள் குறைமாதப் பிறப்புகள் – நீண்டகால மருத்துவக் கண்காணிப்பு அவசியம்!

இலங்கையில் இடம்பெறும் மொத்தப் பிறப்புகளில் சுமார் 10 சதவீதமானவை குறைமாதப் பிறப்புகளாக...

‘உயிருடன் திரும்புவது சாத்தியமற்றது’: பாகிஸ்தான் சிறைக்கொடுமைகளை அம்பலப்படுத்திய இம்ரான் கானின் கடிதம்!

சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானின் பிடிஐ (PTI) கட்சியின் நிறுவனரும், முன்னாள் பிரதமருமான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்