நாட்டில் நேற்று (12) கொரோனா தொற்றினால் 41 பேர் உயிரிழந்துள்ளனர்.
இலங்கையில் இதுவரை பதிவான உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 3,574 ஆக உயர்ந்துள்ளது.
23 ஆண்களும் 18 பெண்களும் நேற்று உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களில் 12 பேர் 30 முதல் 59 வயதுக்குட்பட்டவர்கள். 28 பேர் 60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள். 30 வயதுக்குக் குறைவான ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, கடந்த 24 மணி நேரத்தில் 1,328 நபர்கள் COVID-19 இலிருந்து குணமடைந்தனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 247,569 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது, 24,963 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று 1,568 நோயாளிகள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட COVID-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 276,106 ஆக உயர்ந்தது.




