ஒரே நேரத்தில் இரண்டு அறுவை சிகிச்சை முகக்கவசங்கள் (surgical masks) அல்லது இரண்டு K95 முகக்கவசங்களை அணியுமாறு பரிந்துரைக்கப்படவில்லை என்று சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பேசிய சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் தலைவர் வைத்தியர் ரஞ்சித் படுவந்துதாவ, சரியாக அணிந்தால் ஒரு முகக்கவசம் கூட போதுமானது என்று கூறினார்.
ஒரு முகக்கவசம் போதுமான பாதுகாப்பை வழங்கவில்லை என்று ஒரு நபர் உணர்ந்தால், அத்தகைய சந்தர்ப்பங்களில், K95 அல்லது ஒரு சத்திர சிகிச்சை முகக்கவசத்திற்கு மேலதிகமாக ஒரு துணி முகக்கவசத்தை பயன்படுத்தலாம் என்று கூறினார்.
எனினும், துணி முகமூடியை K95 அல்லது சத்திர சிகிச்சை முகக்கவசத்திற்கு மேல் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1