பெண் மருத்துவரை நிர்வாணப் படமெடுத்தவர் கிழக்கை சேர்ந்த மருத்துவர்!

Date:

ராகம மருத்துவமனையில் பணிபுரியும் இளம் பெண் மருத்துவர் உடை மாற்றுவதை புகைப்படம் எடுத்ததாக கூறப்படும் மற்றொரு வைத்தியர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது பற்றிய மேலதிக விபரங்கள் வெளியாகியுள்ளன.

கைதான மருத்துவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் பணியாற்றுகிறார். 35 வயதான அவர் சம்மாந்துறை சேர்ந்தவர். தற்போது வெல்லம்பிட்டியில் வசித்து வருகிறார்.

இது குறித்து சிங்கள ஊடகங்கள் தரப்பில் வெளியான செய்திகளில்,

கைதானவரும் ஏற்கனவே ராகம வைத்தியசாலையில் பணியாற்றியுள்ளார்.

பெண் மருத்துவர் தங்கியிருந்த விடுதிக்கு சென்று, அவரை சந்திக்க ஆண் மருத்துவர் திட்டமிட்டுள்ளார். பெண் மருத்துவருக்கு தெரியாமல் அதைச் செய்ய முடிவு செய்தார்.

கடந்த வாரம் ஒரு நாள், பெண் மருத்துவர் வேலை முடிந்து தனது விடுதிக்கு புறப்பட்டார். இரவு 8.45 மணியளவில் தனது விடுதி குளியலறைக்கு சென்று விட்டு வெளியில் வந்து ஆடை மாற்ற தயாரான போது, அறை கண்ணாடி யன்னலின் வெளியில் இருந்து சத்தம் கேட்டுள்ளது. பெண் மருத்துவர் சத்தம் வந்த திசையில் பார்த்த போது, தனது நண்பரான ஆண் மருத்துவர் அங்கு நின்றுள்ளார். அவர் கையடக்க தொலைபேசியில் புகைப்படம் எடுத்தபடி நின்றுள்ளார்.

பெண் மருத்துவரை நிர்வாண கோலத்தில் அவர் புகைப்படம் எடுத்து விட்டார்.

அதிர்ச்சியில் அவர் சத்தமிட்டபடி, தனது உடலை மறைத்துக் கொண்டு மற்றைய அறைக்குள் ஓடிச்சென்றுள்ளார். வேறொரு ஆடை அணிந்தபடி வந்து, ஆண் மருத்துவரை தட்டிக் கேட்டுள்ளார்.

கையடக்க தொலைபேசியிலிருந்து தனது புகைப்படங்களை அழிக்கும்படி பெண் மருத்துவர் சத்தமிட்டுள்ளார்.

எனினும், ஆண் மருத்துவர் அதை கேட்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த பெண் மருத்துவர், அவரது கைத்தொலைபேசியயை பறித்து, படங்களை அழிக்க முயன்றார். எனினும், அதற்குள் படங்களை இணைய சேமிப்பில், அவர் சேமித்து விட்டார்.

தனது காதலை ஏற்றுக்கொண்டால், புகைப்படங்களை அழிப்பதாக கூறிவிட்டு ஆண் வைத்தியர் சென்றுவிட்டார்.

தனது நிர்வாண படங்கள் இன்னொருவரின் கையடக்க தொலைபேசியில் இருப்பதன் ஆபத்தை உணர்ந்த பெண், 119 என்ற அவசர இலக்கத்தை  தொடர்பு கொண்டு நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையிலேயே கொழும்பு தேசிய மைருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவர் கைதாகியுள்ளார்.அவர் வெலிசறை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

அவர் மீது இதேபோன்ற 2 குற்றச்சாட்டுக்கள் ஏற்கனவே பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

பிரித்தானிய பொலிசாரால் தேடப்படும் யாழ் இளைஞன்!

பிரித்தானியாவில் குற்றச்செயலில் ஈடுபட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவரை பொலிசார்...

கொடூர குற்றவாளி பஸ் லலித் நாளை இலங்கை அழைத்து வரப்படுகிறார்!

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம், டுபாய் காவல்துறையால் கைது செய்யப்பட்ட, சக்திவாய்ந்த...

யாழில் நகைத்திருடர்கள் பேர் கைது!

யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்