இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளரான கிராண்ட் ஃப்ளவரின் சேவையை நிறுத்த இலங்கை கிரிக்கெட் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிரிக்கெட் தொழில்நுட்பக் குழு கிராண்ட் ஃப்ளவரின் சேவையில் திருப்தி அடையவில்லை. இதனால் வேறொரு பயிற்சியாளரை நியமிப்பது குறித்து கிரிக்கெட் நிறுவனம் ஆராய்ந்து வருகிறது.
இதேவேளை, கிராண்ட் ஃப்ளவர் இங்கிலாந்தில் உயிர் பாதுகாப்பு குமிழியை உடைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். உயிர் பாதுகாப்பு குமிழியில் இலங்கை அணி செயற்பட்ட போதும், கிராண்ட் ஃபிளவர் தொற்றிற்குள்ளாகியமை குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1