வடக்கின் இன்றைய பிசிஆர் பரிசோதனை முடிவுகள்!

Date:

வடமாகாணத்தில் இன்று (11) மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் 66 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதில் வடக்கை சேர்ந்தவர்கள் 60 பேர். தனிமைப்படுத்தல் மையங்களை சேர்ந்த 6 பேர் உ்ள்ளங்குகின்றனர்.

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இன்று 850 பேரின் பிசிஆர் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டன. இதில் 66 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

யாழ் மாவட்டத்தில், சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 16 பேர், பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 18 பேர், நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், யாழ் போதனா வைத்தியசாலையில் 5 பேர், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் ஒருவர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 6 பேர், என 47 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

மன்னார் மாவட்டத்தில், முசலி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேர், மன்னார் பொது வைத்தியசாலையில் 5 பேர் என, 7 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில், பூநகரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேர் தொற்றிற்குள்ளாகினர்.

வவுனியா, சித்த வைத்தியசாலயில் 4 பேர் தொற்றிற்குள்ளாகினர்.

இதுதவிர, அக்கராயன்குளம் தனிமைப்படுத்தல் மையத்தில் 4 பேரும், யாழ் தனிமைப்படுத்தல் மையமொன்றில் 2 பேரும் தொற்றிற்குள்ளாகினர்.

spot_imgspot_img

More like this
Related

புகையிரதம் மோதி ஒருவர் பலி

யாழ்ப்பாணம் - அரியாலை புங்கன்குளம் பகுதியில் உள்ள புகையிரதத்துடன் மோதுண்டு ஒருவர்...

கொக்கட்டிச்சோலை கண்டியனாறு பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை 10 பெரல் கோடா மீட்பு

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள கண்டியனாறு குளம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்