Pagetamil
இலங்கை

இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற கஞ்சா பறிமுதல்!

நாகை மாவட்டம் விழுந்தமாவடியில் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் கஞ்சா கடத்தப்படுவதாக கீழையூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், போலீசார் வேளாங்கண்ணி முதல் விழுந்தமாவடி வரையிலான பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, விழுந்தமாவடி அருகே சவுக்கு காட்டில் சந்தேகத்திற்குரிய வகையில் பதுக்கி வைத்திருந்த மூட்டைகளை சோதனையிட்டனர்.

அப்போது, அதில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. இதனை அடுத்து, 4 மூட்டைகளில் இருந்த சுமார் 126 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மொத்த மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும். இதுதொடர்பாக கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கஞசாவை இலங்கைக்கு கடத்த முயன்ற விழுந்தமாவடியை வீரமுரசு (26), செருதூரை சேர்ந்த கண்ணன் ஆகியோரை கைதுசெய்தனர்.

மேலும், அவர்களிடம் இருந்து கடத்தக்கு பயன்படுத்திய காரையும் கைப்பற்றினர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள வேட்டைக்காரனிருப்பு பகுதியை சேர்ந்த ராகுல் என்பவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

செவ்வந்தி கடல் வழியாக இந்தியாவுக்கு எஸ்கேப்?

Pagetamil

பிரதேச செயலக உத்தியோகத்தரின் கதிரையை எடுத்து சென்றவருக்கு விளக்கமறியல்: அவருக்கு சமூக வலைத்தளத்தில் ஆதரவு!

Pagetamil

8 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கணித ஆசிரியர் கைது!

Pagetamil

மோசமாக நடந்த இ.போ.ச நடத்துனர் பணி இடைநீக்கம்

Pagetamil

சாணக்கியன் சொன்னதை நிரூபித்து காட்டட்டும்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!