ஜேர்மனிய தலைநகர் பெர்லினில் பாலின உரிமைகள் சமத்துவத்தை கோரி, நூற்றுக்கணக்கான எதிர்ப்பாளர்கள் இன்று மேலாடையற்ற சைக்கிள் பேரணியில் ஈடுபட்டனர்.
பிரெஞ்சு பெண்ணான கப்ரியல் லெபிரெட்டன் கடந்த மாதம் பெர்லின் தடாகமொன்றிலிருந்து பொலிசாரால் வெளியேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதையடுத்து, அவர் தடாகத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மேலாடை அணியவில்லை. மார்புகளை சுதந்திரமாக விடு, எனது உடல் எனது தெரிவு என்ற வாசகங்களை உடலில் எழுதியிருந்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட ஆண்கள் மார்புக்கச்சை அணிந்திருந்தனர்.
ஜேர்மனியில் நிர்வாணமாக திரிவது அனுமதிக்கப்படாது. ஆனால் உடல் ஓவியம் அல்லது மார்பு காம்புகளை மறைக்கும் ஏற்பாடுகளுடன் நடமாடலாம்.
இன்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களை’ ப்ரா, பிகினி அல்லது முலைக்காம்பு ‘போம் பாம்ஸ்’ அணிய பொலிசார் அறிவுறுத்தினர். எனினும், போராட்டக்காரர்கள் அதை செவிமடுக்கவில்லை.