ஜப்பான் வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாக கூறி, நாட்டின் பல பாகங்களிலும் பண மோசடியில் ஈடுபட்ட பெண்ணை நவகமுவ பொலிசார் கைது செய்துள்ளனர். கடுவெல பகுதியில் அவர் கைதானார்.
தெஹியோவிட்டவை சேர்ந்த 49 வயதுடையவரே கைதாகினார்.
அந்தப் பெண் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், ஜப்பானுக்கு அனுப்புவதாகக் கூறி ஏராளமான பணத்தை மோசடி செய்ததாக தெரிய வந்துள்ளது.
நவகமுவ பகுதியில் 8,00,000 ரூபா மோசடி தொடர்பாக பொலிசாருக்கு செய்யப்பட்ட மோசடியை தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அவருக்கு எதிராக 32 வழக்குகளும் 17 நீதிமன்றங் பிடியாணைகளும் உள்ளன என்பது தெரிய வந்துள்ளது.
சந்தேக நபர் இன்று (11) கடுவெல நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1