இராணுவச்சீருடையை ஒத்த ஆடைகள், தோட்டா மறைத்து வைத்திருந்தவர் கைது!

Date:

வீடான்றின் காணியில் இராணுவ உடையை ஒத்த பொருட்களை பரல் ஒன்றில் மறைத்து வைத்திருந்த ஒருவரை சவளக்கடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய சொறிக்கல்முனை வீரச்சோலை பகுதியை சேரந்த 64 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் சனிக்கிழமை(10) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து இரு வேறு வகையிலான இராணுவ உடைகள் இடங்கிய பொருட்கள் உட்பட 2 தோட்டாக்கள் உட்பட சில பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பரல் மீட்கப்பட்ட பகுதிக்கு விசேட அதிரடிப்படையினர் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதுடன் சவளக்கடை பொலிஸார் சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

-பா.டிலான்-

spot_imgspot_img

More like this
Related

ஈரான் கேட்டதால் பேச்சு நடத்த தயார்… ஆனால் போர் நிறுத்தம் முறிந்து விட்டது!

பேச்சுவார்த்தைகளைத் தொடர ஈரான் கோரியதாகவும், அதற்கு அமெரிக்கா ஒப்புக்கொண்டதாகவும், ஆனால் போர்...

யாழில் இளைஞனை கடத்தி சித்திரவதை செய்த கும்பல் கைது!

யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவரை கடத்தி சித்திரவதைக்கு உட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய ஐவர்...

கரூரில் தவெகவின் அலட்சியத்தால் உயிரிழந்த 31 பேருக்கு அரசுப்பணி!

கரூரில் தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரில் 31 பேருக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்