வவுனியாவில் பாடசாலை சமூகத்தினர் 3025 பேருக்கு 12ம் திகதி முதல் கோவிட் தடுப்பூசிகள் வழங்க நடவடிக்கை

Date:

வவுனியா மாவட்டத்தில் பாடசாலையில் கடமையாற்றும் அதிபர், ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் உட்பட 3025 பேருக்கு கோவிட் தடுப்பூசிகள் வழங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கைகள் இம்மாதம் 12ம் திகதி முதல் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், வவுனியா மாவட்டத்தில் 2802 ஆசிரியர்களும், 205 அதிபர்களும், 198 பாடசாலை மற்றும் வலயத்தில் பணியாற்றும் ஏனைய ஊழியர்களும் உள்ளடங்குகின்றனர்.

அந்த வகையில் வவுனியா வடக்கு வலயத்தில் நெடுங்கேணி பகுதியில் 358 பேரும், ஓமந்தை பகுதியில் 568 பேருமாக 926 பேருக்கும், வவுனியா தெற்கு வலயத்தில் தெற்கு சிங்கள பிரிவில் 383 பேருக்கும், தெற்கு தமிழ் பிரிவில் 1419 பேருக்கும், வெண்கல செட்டிக்குளம் பிரிவில் 477 பேருக்குமாக 2279 பேருக்கும் என மொத்தமாக 3205 பேருக்கு கோவிட் தடுப்பூசிகள் ஏற்றப்படவுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

ஃப்ளைதுபாய் துணை விமானி கோடரி மூலம் பயங்கரவாத தாக்குதல்

Flydubai விமானம் FZ1073-இன் துணை விமானி, விமானப் பயணத்தின்போது ஒரு "பயங்கரவாத"...

1 Kg கோழி இறைச்சி இலஞ்சமாக கேட்ட பொலிஸ்காரர் பணி இடைநீக்கம்!

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவருக்குப் பொலிஸ் பிணை வழங்குவதற்காக ஒரு கிலோகிராம்...

வெளிநாட்டு பெண்ணை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய முச்சக்கர வண்டி சாரதிக்கு 10 வருட சிறை!

வேலைவாய்ப்பு தருவதாகக் கூறி இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்