Pagetamil
உலகம்

மியான்மரில் ஜூலை 23 வரை ஆரம்ப பள்ளிகளை தற்காலிகமாக மூட உத்தரவு!

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நாடுகளில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

மியான்மரில் கொரோனா வைரஸ் பரவல் குறைந்து வந்ததால் கடந்த மாதம் முதல் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டது.

இதற்கிடையே, கடந்த சில தினங்களாக மியான்மரில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

நேற்றைய தினம் அங்கு புதிதாக 4,132 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதிலும் குறிப்பாக ஆசியா உள்ளிட்ட நாடுகளில் வேகமாக பரவும் தன்மை கொண்ட டெல்டா வகை கொரோனா மியான்மரில் பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், மியான்மரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்குள்ள அனைத்து ஆரம்பப் பள்ளிகளையும் ஜூலை 23  வரை தற்காலிகமாக மூட அந்நாட்டின் சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

உலக அரசியலில் எலான் மஸ்க்கின் சர்ச்சை

east tamil

சீனாவில் 5.3 ரிச்டர் நிலநடுக்கம்

east tamil

கலிபோர்னியாவில் காட்டுத்தீ – மக்கள் வெளியேற்றம்

east tamil

கிறிஸ்மஸ் கேக்கில் நஞ்சு கலந்து 3 குடும்ப உறுப்பினர்களை கொன்ற மருமகள் கைது!

Pagetamil

நேபாளத்தில் நிலநடுக்கம்

east tamil

Leave a Comment