தற்போதுள்ள சுகாதார வழிகாட்டல் நடைமுறைகள் இலகுபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்த்தன அறிவித்துள்ளார்.
எனினும், மாகாணங்களிற்கிடையிலான பயணத்தடை மேலும் 14நாட்களிற்கு நீடிக்கப்பட்டுள்ளது.
புதிய வழிாட்டலின்படி, கொரொனா தொற்று அல்லாத காரணங்களினால் உயிரிழப்பவரின் சடலம் 24 மணித்தியாலங்களிற்குள் இறுதிச்சடங்கு செய்யப்பட வேண்டும். மரணச்சடங்கில் 50 பேர் கலந்து கொள்ளலாம்.
திருமண நிகழ்வுகளிற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மணடபத்தின் ஆசன எண்ணிக்கையில் 25 வீதமானவர்கள் அல்லது 150 பேரின் பங்கேற்புடன் திருமணங்களை நடத்தலாம்.
திரையரங்கங்கள், அருங்காட்சியகங்கள் திறக்க அனுமதி. ஆசன எண்ணிக்கையில் 50 வீதமானவர்களையே அனுமதிக்க முடியும்.
What’s your Reaction?
+1
+1
1
+1
+1
+1
+1
+1