30.6 C
Jaffna
April 10, 2025
Pagetamil
சினிமா

“ஆரம்பிக்கலாங்களா” இன்று 5 மணிக்கு.. விக்ரம் படத்தின் பர்ஸ்ட் லுக்!

கமல் நடிப்பில் உருவாகி வரும் ‘விக்ரம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை வெளியாகும் என அப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நேற்று அறிவித்திருந்தார். அவரின் அறிவிப்பை அடுத்து கமல் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளானர். சமூக ஊடகங்களை ஆக்கிரமித்து உள்ளனர்.

தமிழ் சினிமாவின் நட்சத்திர இயக்குனர்களில் ஒருவராக மாறியுள்ளார் லோகேஷ் கனகராஜ். “கைதி” படத்தின் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்த லோகேஷ் கனகராஜ் அடுத்த படத்திலேயே விஜய்யை வைத்து மாஸ்டர் படம் இயக்கி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.

அடுத்ததாக தனது கலை உலக குருவான கமல்ஹாசனை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. நடிகர் கமலஹாசன் தயாரித்து நடிக்கும் விக்ரம் படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டு இறுதியில் வெளியானது.

ஆனால் அதற்கு பிறகு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட மக்கள் நீதி மய்யம் கட்சி தயாரானதால், அந்தப் படத்தின் படப்பிடிப்பு தாமதமானது

இதனைத் தொடர்ந்து இப்படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டர் கடந்த வருடம் கமலின் பிறந்தநாளான நவம்பர் 7 ஆம் திகதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மோஷன் போஸ்டரின் இறுதியில் இருந்த “ஆரம்பிக்கலாங்களா” என்ற வசனம் இணையத்தில் வைரலானது.

"ஆரம்பிக்கலாங்களா"  இன்று 5 மணிக்கு.. விக்ரம் படத்தின் பர்ஸ்ட் லுக்!

தற்போது கமலின் இந்தியன் 2 படம் பிரச்சனையில் இருப்பதால் அடுத்து எந்த படத்தில் நடிப்பார், பாபநாசம் 2 ஹா அல்லது விக்ரமா என்று கமல் ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், “ஆரம்பிச்சுடோம்” என்று இயக்குனர் லோகேஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே படத்தின் டெக்சினியன்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் சமீபத்தில் இணைந்த கேமரா மேன் கிரீஸ் கங்காதர் உடன் அடுத்த மாதம் இப்படத்தின் சூட்டிங் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்

அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் – இது ‘ஹாலிவுட்’ லெவல்!

Pagetamil

‘மஞ்சும்மல் பாய்ஸ்’ சாதனையை முறியடித்த ‘எம்புரான்’!

Pagetamil

குடும்ப வன்முறை வழக்கை ரத்து செய்ய கோரி ஹன்சிகா மனு

Pagetamil

‘திருமணமான ஆணுடன் தொடர்பு வைக்க மாட்டேன்’: ஜி.வி.பிரகாஷுடனான உறவை மறுக்கும் நடிகை திவ்யபாரதி!

Pagetamil

கார் விபத்தில் சிக்கி காயமடைந்த நடிகர் சோனு சூட் மனைவி

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!