பிக் பாஸ் புகழ் அர்ச்சனாவுக்கு மூளையில் இன்று அறுவை சிகிச்சை நடப்பதாக அவரே இன்ஸ்டாகிராமில் அறிவித்து உள்ளார். அதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.
பிக் பாஸ் நான்காம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர்
அர்ச்சனா. அதற்கு முன்பு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளராக இருந்து வந்தவர் பிக் பாஸுக்கு பிறகு விஜய் டிவியிலேயே நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க ஆரம்பித்தார். தற்போது அவர் சில முக்கிய ஷோக்களை தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில் அர்ச்சனா தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும், மூளையில் சர்ஜரி நடைபெற போவதாகவும் தெரிவித்து உள்ளார்.
அவரது மூளையில் Cerebrospinal fluid leak இருப்பதால், அதற்காக re-construction சர்ஜரி இன்று காலை 7 மணி முதல் 11 மணி வரை நடைபெற உள்ளது. மேலும் ஒரு வாரம் அவர் மருத்துவமனையில் தான் இருக்கவேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்து உள்ளார்களாம்.
இதில் இருந்தும் மீண்டு வருவேன் என்றும், இதற்காக ஒரு சின்ன பிரேக் எடுத்துக்கொள்கிறேன் என்றும் ரசிகர்களிடம் கூறும் வகையில் அர்ச்சனா பதிவிட்டு உள்ளார்.