COVID-19 குறித்த திருத்தப்பட்ட புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தனவினால் வெளியிடப்பட உள்ளது.
இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனை தெரிவித்தார்.
தற்போதுள்ள பல கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, பல திருத்தப்பட்ட விதிமுறைகளைக் கொண்டிருக்கும் என தெரிவித்தார்.
திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களின்படி, ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்கள் திருமணங்களில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படும். தற்போதைய கட்டுப்பாடுகளின்படி, திருமணங்கள் தடைசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களின்படி, ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையானவர்களுடன் வழிபாட்டுத் தலங்களை மீண்டும் திறக்க அனுமதிக்கப்படும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
1
+1