கொவிட் -19 தொற்று காரணமாக இரத்தினபுரி, கொஸ்கல தோட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 125 குடும்பங்களைச் சேர்ந்த மக்களுக்கு ஐந்து லட்சம் ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்களை தோட்ட வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் கௌரவ ஜீவன் தொண்டமான் அவர்கள் அனுப்பி வைத்துள்ளார்.
குறித்த பொருட்களை வழங்கும் நிகழ்வு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளர் ரூபன் பெருமாள் அவர்களின் தலைமையில் கொஸ்கல தோட்டத்தில் நடைப்பெற்றது.
கொரோனா தொற்று காரணமாக தமது அன்றாட வருமானத்தை இழந்து, மிகவும் இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டதனால் இரண்டு தினங்களுக்கு முன்பாக வீதியில் இறங்கி போராடியது குறித்து அறிந்த இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்கள் தாமாக முன்வந்து, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளர் ரூபன் பெருமாள் அவர்களின் ஊடாக விபரங்களை பெற்று, அதற்கேற்ற வகையில் உலர் உணவுப் பொருட்களை அனுப்பி வைத்துள்ளார்.




