27.4 C
Jaffna
December 22, 2024
Pagetamil
இலங்கை

முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் வீட்டில் தீக்காயத்திற்குள்ளான சிறுமி விவகாரத்தில் தீவிர விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் வீட்டில் பணியாற்றிவந்த 16 வயதான யுவதியொருவர் பலத்த தீக்காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறுமியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 3ஆம் திகதி சம்பவம் நடந்தது.

அக்கரபத்தனை, டயகம பகுதியைச் சேர்ந்த 16 வயதான மேற்படி யுவதி வறுமை காரணமாக 7 ஆம் தரத்துடன் பாடசாலை கல்வியை இடை நிறுத்தியுள்ளார்.

6 சகோதரர்களைக் கொண்ட குடும்பத்தில் மூன்றாமவரான இவருக்கு, மூத்த சகோதரன் ஒருவரும், சகோதரிகள் நால்வரும் உள்ளனர்.

சுமார் 8 மாதங்களுக்கு முன்னதாக தரகர் ஒருவரின் மூலம் நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டுக்கு பணிப்பெண்ணாக சென்றுள்ளதாக யுவதியின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

பாதிக்கப்பட்ட சிறுமியான இஷாலனியின் சகோதரர் இது தொடர்பில் தெரிவிக்கையில் “2020 ஒக்டோபர் மாதமே எனது தங்கை வேலைக்குச்சென்றுள்ளார். இன்றுவரை ஒருநாள்கூட அவர் வீட்டுக்கு வரவேயில்லை. அவரை சந்திக்கச் சென்றால்கூட அதற்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. இந்நிலையில் திடீரென அம்மாவுக்கு தொலைபேசி அழைப்பொன்று வந்துள்ளது. எங்கள் தங்கை வைத்தியசாலையில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. கடந்த 3 ஆம் திகதியே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
எரிகாயங்களுடன் அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். உடலில் 71 சதவீதம் எரிந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். தங்கைக்கு என்ன நடந்தது என தெரியவில்லை. எங்களுக்கு உண்மை தெரியப்படுத்தப்பட வேண்டும்.”

அவர் மாதாந்தம் வீட்டுக்கு, பணம் அனுப்பிவந்ததுடன், அவ்வப்போது தொலைபேசி ஊடாகவும் வீட்டாருடன் பேசியுள்ளார்.

இறுதியாக வீட்டாருடன் தொலைபேசியில் பேசியபோது, அவ்வீட்டில் பணிபுரியும் சாரதி ஒருவர் தன்னை தாக்கினார் என அவர் கூறியதாக யுவதியின் சகோதரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் விசாரணையை ஆரம்பித்துள்ளதாக பொரளை பொலிஸார் நேற்று கொழும்பு நீதிவான் நீதிமன்றுக்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

கொழும்பு மேலதிக நீதிவான் லோச்சனீ அபேவிக்ரமவுக்கு இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தற்போது தீ காயங்களுக்கு உள்ளான குறித்த சிறுமி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 73 ஆவது சிகிச்சை அறையில் தீவிர சிகிச்சைப் பிரிவு 2 இல் சிகிச்சைப் பெறுவதாகவும், வாக்கு மூலம் ஒன்றினைக் கூட பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் கவலைக் கிடமாக நிலைமை உள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றுக்கு அறிவித்தனர்.

கடந்த 3 ஆம் திகதி வெள்ளியன்று உடலில் தீ பரவியமை காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், வைத்தியசாலை பொலிஸ் பொறுப்பதிகாரி இது தொடர்பில் தமக்கு அறிவித்து முறையிட்டதாக பொரளை பொலிஸார் நீதிமன்றுக்கு தெரிவித்தனர்.

இந் நிலையில் சம்பவம் தொடர்பில் சிறுமி வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த பெளத்தாலோக்க மாவத்தை, கொழும்பு 7 இல் அமைந்துள்ள வீட்டில் வசிக்கும் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் மனைவியின் தந்தை, தாய் மற்றும் குறித்த சிறுமியை வீட்டு வேலைக்கு கையளித்த நபர் மற்றும் வீட்டில் வேலை செய்த மற்றொரு ஆணின் வாக்கு மூலங்களை பதிவு செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந் நிலையில் குறித்த தீப்பரல் தொடர்பில் சேகரிக்கப்பட்டுள்ள சான்றுப் பொருட்களை அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பி அறிக்கை பெற அனுமதியளிக்குமாறு பொலிசார் கோரிய நிலையில் அதற்கு நீதிவான் லோச்சனீ அபேவிக்ரம அனுமதியளித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சட்ட விரோத அகழ்வு பணிகளில் ஈடுபட்ட மூவர் கைது

east tamil

மோப்ப நாய்களுடன் கிளிநொச்சிப் பொலிசார் வீதிச் சோதனை

Pagetamil

வேலணை மக்களுக்கு அதிர்ச்சிச் செய்தி: 24 மணித்தியால மருத்துவ சேவை தடைப்படும் அபாயம்!

Pagetamil

ஐயப்பன் பக்தர்களுடன் பிரதமர் ஹரிணியை சந்தித்தார் செல்வம் அடைக்கலநாதன்

Pagetamil

கொதித்தெழுந்த சிவாஜி!

Pagetamil

Leave a Comment