விம்பிள்டன் போட்டியில் ஜோகோவிச் அரையிறுதிக்கு முன்னேற்றம்

Date:

லண்டனில் நடைபெறும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார்.

தற்போது லண்டனில் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. இது கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றாகும். நேற்று நடந்த காலிறுதி சுற்றில் உலகப் புகழ்பெற்ற டென்னிஸ் வீரரான நோவக் ஜோகோவிச் மற்றும் ஹங்கேரி நாட்டை சேர்ந்த ஃபுக்சோவிக்ஸ் ஆகியோர் மோதினர்.

இந்த காலிறுதி போட்டியில் தொடக்கத்தில் இருந்தே ஜோகோவிச் ஆதிக்கம் காணப்பட்டது. அவர் நேற்றைய காலிறுதி போட்டியில் 6-3,6-4,6-4 என்னும் செட் கணக்கில் ஃபுக்சோவிக்ஸை தோற்கடித்துள்ளார். இதன் மூலம் ஜோகோவிச் அரையிறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளார்.

நாளை நடைபெறும் இரு அரையிறுதி போட்டிகளில் ஒரு போட்டியில் ஜோகோவிச் மற்றும் கனடா வீரர் சபவலோ ஆகியோர் மோதுகின்றனர். மற்றொரு அரையிறுதி போட்டியில் இத்தாலி நாட்டு வீரர் பெரோட்டினி மற்றும் போலந்து நாட்டின் ஹர்காஸ் ஆகியோர் மோதுகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

முத்தரப்பு ஒருநாள் தொடர்: இங்கிலாந்து நிர்ணயித்த மெகா இலக்கை விரட்டியடித்தது இலங்கை!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் 3வது போட்டியில் இங்கிலாந்து நிர்ணயித்த மெகா இலக்கை,...

யாழ். இணுவில் சந்தியில் கோர விபத்து! துவிச்சக்கர வண்டியில் சென்ற 67 வயதுடையவர் பலி

யாழ்ப்பாணம் - இணுவில் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் சம்பவ...

நெல் வயலில் விழுந்து உயிருக்குப் போராடும் 15 வயது காட்டு யானை

கிழக்கு வனவிலங்கு மண்டலம்  அம்பாறை வனவிலங்கு அலுவலகத்தின் கீழ் உள்ள வளத்தாப்பிட்டி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்