சட்ட விரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட ஒரு தொகுதி உலர்ந்த மஞ்சள் மூடைகளை இன்று வியாழக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் மன்னார் பெரியகடை கடற்கரை கலப்பு பகுதியில் வைத்து இராணுவத்தினர் மீட்டுள்ளனர்.
மன்னார் இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் விரைந்து செயல்பட்ட இராணுவத்தினர் மன்னார் பெரியகடை கடற்கரை கலப்புப் பகுதியில் வைத்து சட்ட விரோதமாக நாட்டக்குள் கொண்டு வரப்பட்ட 18 மூடைகளில் பொதி செய்யப்பட்ட 672 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் மூடைகள் இவ்வாறு கைப்பற்றப்பட்டது.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய வள்ளங்கள் 3 மற்றும் பட்டா ரக வாகனமும் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டது.சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1