கலர்ஸ் தமிழில் அபி டெய்லர் என்ற புது சீரியல் வரும் 19 முதல் ஒளிபரப்பாக இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
கலர்ஸ் தமிழ் டிவியில் அபி அபி டெய்லர் என்ற புது சீரியலின் ப்ரோமோ பல வாரங்களுக்கு முன்பு வெளியானது. அதில் ரேஷ்மா முரளிதரன் தான் டெய்லராக நடித்து உள்ளார். ப்ரோமோ நல்ல வரவேற்பை பெற்று எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது இந்த தொடர் ஒளிபரப்பை தொடங்க உள்ள தேதி மற்றும் நேரத்தை கலர்ஸ் தமிழ் டிவி அறிவித்து உள்ளது.
இம்மாதம் (ஜூலை 2021) 19- முதல் இரவு 10 மணிக்கு இந்த அபி டெய்லர் தொடர் ஒளிபரப்பாக உள்ளது. ஏற்கனவே ஹீரோயின் அறிமுக ப்ரோமோ வெளியாகிவிட்ட நிலையில் தற்போது ஹீரோ அசோக்கை அறிமுகப்படுத்தும் ப்ரோமோ வெளிவந்து உள்ளது.
ஹீரோ அசோக்கை ஒரு கார்ப்பரேட் நிறுவன பின்னணியில் அறிமுகப்படுத்துகிறது ப்ரோமோ. அங்கு முதலாளியான அஷோக்கிற்கும் அபிக்கும் இடையில் ஒரு மெல்லிய மோதல் உருவாகிறது. இது கதை ஓட்டத்தை விருவிருப்பாக்கப் போகிறது என காட்டுகிறது.
#BOSSArrived | நம்ம ஹீரோ இராவணனும் இல்லை ராமனும் இல்லை! 😎 #AbhiTailor | July 19 முதல், திங்கள் – சனி இரவு 10 மணிக்கு#AshokTheBoss | #AshAbhi | #ColorsTamil pic.twitter.com/kXAEqZZJgt
— Colors Tamil (@ColorsTvTamil) July 5, 2021