நாளை வெளியாகிறது சிவகார்த்திகேயனின் ‘வாழ்’ டிரெய்லர்!

Date:

சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘வாழ்’ திரைப்படத்தின் டிரெய்லர் நாளை வெளியாக உள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு வெளியான ‘அருவி’ என்ற வித்தியாசமான படத்தை எடுத்தவர் அருண் பிரபு புருஷோத்தமன். இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த அதிதி பாலன், தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரின் பாராட்டையும் பெற்றார். இந்த படத்தில் அஞ்சலி வரதன், கவிதாபாரதி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்த படம் சூப்பர் ஹிட்டடித்தது.

இந்த படத்தையடுத்து, தனது அடுத்த படத்தையும் இயக்கியுள்ளார் அருண் பிரபு புருஷோத்தமன். ‘வாழ்‘ என பெயரிடப்பட்டுள்ள இந்த படம் வித்தியாசமான கதைக்களத்தோடு உருவாகியுள்ளது. இந்த படத்தில் அருவி படத்தின் உதவி இயக்குனர் பிரதீப் கதாநாயகனாக நடித்துள்ளார். மற்றபடி புதுமுக நடிகர்கள் பலர் நடித்துள்ளனர். கடந்த 2019ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்படம் கொரானாவால் தற்போதுதான் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

சிவகார்த்திகேயனின் எஸ்.கே. புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த ஆண்டே ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்ட இப்படம் தற்போதுதான் வெளியாக உள்ளது. திரையரங்கில் வெளியாகும் என எதிர்பார்க்ப்பட்ட இப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளது. அதன்படி சோனி லைவ்வில் வரும் ஜூலை 16ம் திகதி ‘வாழ்’ திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் ‘வாழ்’ திரைப்படத்தின் டிரெய்லரை சோனி லைவ் நாளை வெளியிடுகிறது. அதோடு இந்த படத்தின் ஆடியோவும் வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

கொடூர குற்றவாளி பஸ் லலித் நாளை இலங்கை அழைத்து வரப்படுகிறார்!

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம், டுபாய் காவல்துறையால் கைது செய்யப்பட்ட, சக்திவாய்ந்த...

யாழில் நகைத்திருடர்கள் பேர் கைது!

யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும்...

முச்சக்கர வண்டி போக்குவரத்து சேவையில் ஈடுபட குறைந்தபட்ச வயது 40: அரசு திட்டம்!

முச்சக்கர பயணிகள் போக்குவரத்து சேவைகளில் ஈடுபடுவதற்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்