25.4 C
Jaffna
December 29, 2024
Pagetamil
இலங்கை

சுகாதார அமைச்சிற்கு ஆறு மில்லியன் பெறுமதியான பி.சீ.ஆர் இயந்திரம் அன்பளிப்பு

கொரானா நோயினைக் கட்டுப்படுத்துவதில் அந்த நோய் தொற்றியவர்களை
மிகவிரைவில் கண்டறிந்து தனிமைப்படுத்தி தேவைப்படும்போது விரைவாக சிகிச்சை
அளிப்பது ஒரு முக்கியமான பங்கினை வகிக்கிறது. நோய்த் தொற்றினை
கண்டறிவதற்கு பி.சி.ஆர் இயந்திரம் அவசியமாகும்.

முழு நாடும் கொரானாவிற்கு எதிராக போராடும் தற்போதைய காலகட்டத்தில் தமது
சமூகப் பொறுப்பினை உணர்ந்து திரு S.T.S அருளானந்தன் (தலைவர், இலங்கை
கட்டடப் பொருள் வணிகர் கழகம்) மற்றும் இணைப்பாளர் திரு S சண்முகநாதன்
ஆகியோர் எடுத்த முன்முயற்சியை அடுத்து இலங்கை கட்டடப் பொருள் வணிகர்
கழகத்தினரால் (Ceylon Hardware Merchants Association) ஆறு மில்லியன்
பெறுமதியான பி.சி.ஆர் இயந்திரம் சுகாதார அமைச்சிடம் கையளிக்கப்பட்டது.

சுகாதார அமைச்சில் நேற்று (07.07.2021) திரு S.T.S அருளானந்தன் திரு H.M.
ஐயவீர (செயலாளர் இலங்கை கட்டடப் பொருள் வணிகர் கழகம்) மற்றும் திரு S.
சண்முகநாதன் ஆகியோரினால் சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் முனசிங்க,
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்த்தன
ஆகியோரிடம் பி.சி.ஆர் இயந்திரமானது உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
இதன்போது பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகங்களான வைத்தியர்
S.சிறிதரன் மற்றும் வைத்தியர் S. தர்மரத்ன ஆகியோரும் உடனிருந்தனர்

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

போக்குவரத்து விதிமீறல்: 383 சாரதிகள் மீது வழக்கு பதிவு

east tamil

‘மக்களுக்கு எதிராக செயற்பட்ட அரச அதிகாரிகளுடன் போராடிக்கொண்டிருக்கிறோம்’: அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி

Pagetamil

மஹிந்தவின் வலது கையிடம் நேற்று: மகனிடம் 3ஆம் திகதி விசரணை!

Pagetamil

இலஞ்சம் வாங்கியபோது மாட்டிய முன்னாள் மாகாணசபை உறுப்பினருக்கு விளக்கமறியல்!

Pagetamil

மனுஷ நாணயக்காரவின் சகோதரர் கைது

Pagetamil

Leave a Comment