சிம்பு பாடியுள்ள தப்பு பண்ணிட்டேன் என்ற புதிய ஆல்பம் பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது.
ஏகே பிரியன் என்பவர் இசையமைத்துள்ள தப்பு பண்ணிட்டேன் என்ற ஆல்பம் பாடலை சிம்பு பாடியுள்ளார். இந்த ஆல்பம் பாடலை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது U1 Records நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார். இந்தப் பாடலில் காளிதாஸ் மற்றும் மேகா ஆகாஷ் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.
தற்போது தப்பு பண்ணிட்டேன் ஆல்பம் பாடலின் வீடியோ வெளியாகியுள்ளத்துட். பாடல் சிம்பு குரலுடன் ஆரம்பிக்கிறது. சண்டை போட்டு பிறந்த காதலர்களைப் பற்றிய பாடலாக இது அமைந்துள்ளது. காளிதாஸ் மற்றும் மேகா ஆகாஷ் இருவரும் ஏற்கனவே ‘புத்தம் புது காலை’ அந்தாலஜியில் சேர்ந்து நடித்துள்ளனர்.
தற்போது இந்தப் பாடலிலும் இருவரின் கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்கவுட் ஆகியுள்ளது. பாடலுக்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்து வருகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1