சஹ்ரானின் போதனையில் கலந்து கொண்டவர் கைது!

Date:

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதார் சஹ்ரான் ஹாஷிமின் தீவிரவாத வகுப்புக்களில் கலந்து கொண்ட மற்றொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாரமல பகுதியை சேர்ந்த 24 வயது இளைஞனே கைதானார். அவர் தற்போது கொச்சிக்கடையில் வசித்து வருகிறார்.  பயங்கரவாத புலனாய்வு பிரிவு (டிஐடி) நேற்று அவரை கைது செய்தது.

சந்தேக நபர் சஹ்ரானுக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் தீவிரவாதம் குறித்த விரிவுரைகளை ஒழுங்கமைக்கவும் நடத்தவும் உதவியதாக கூறப்படுகிறது.

2018-2019 க்கு இடையில் க.பொ.த. சாதாரண தர பரீட்சை எழுதிய மாணவர்களிற்கு  விரிவுரைகளை ஒழுங்கமைக்கவும் நடத்தவும் சஹ்ரான் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு உதவியதற்காக இதுவரை 14 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

நேற்று கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்படுவார்

spot_imgspot_img

More like this
Related

அமெரிக்க- ஈரான் சண்டை தொடர்கிறது!

கடந்த மாத போர் நிறுத்தத்தை முற்றிலுமாகச் சிதைத்த, ஒரு வார காலமாக...

கழிவு அகற்றும் உழவு இயந்திர பெட்டியில் பாதையாத்திரைகளுக்கான உணவு பொருட்கள் எடுத்துச் சென்ற வழங்கிய மட்டு மாநகர சபை

கதிர்காமம் புனித பாதை யாத்திரைகளுக்கு  காட்டுப்பகுதியில் செல்பவர்களுக்கு மட்டக்களப்பு மாநகரசபையின் குப்பை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்