உலகின் மிகப்பெரிய நிர்வாண நகரத்தில் தேனிலவை கொண்டாடும் ஜோடியொன்று தமது புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ள
பிரான்சில் மத்திய தரைக்கடல் கடற்கரையில் உள்ள கடலோர நகரமான கேப் டி ஏஜ், உலகின் மிகப்பெரிய நிர்வாண நகரமாக கருதப்படுகிறது. அங்கு குடியிருப்பவர்களும், சுற்றுலா பயணிகளும் பொது இடங்களில் நிர்வாணமாக நடமாட அனுமதிக்கிறது.
பல்வேறு பகுதிகளில் நிர்வாண பிரதேசங்கள் உள்ளனதான். அங்கெல்லாம் குறிப்பிட்ட சில இடங்களிலும், விடுமுறை தினங்களிலும் சில கடற்கரைகளில் மட்டுமே நிர்வாணமாக இருக்க அனுமதிக்கப்படுகிறது. ஆனால், கேப் டி ஏஜ் முழு நகரமும் மக்களுக்கு இந்த சுதந்திரங்களை அளிக்கிறது.
சூப்பர் மார்க்கெட்டுகள், உணவகங்கள், சிகையலங்கார நிலையங்கள், பேக்கரிகள் மற்றும் வங்கிகளில் கூட மக்கள் முற்றிலும் நிர்வாணமாக நடமாட முடியும்.
ஒவ்வொரு கோடைகாலத்திலும் உலகெங்கிலும் இருந்து 50,000 க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் கேப் டி ஏஜ் நகரத்திற்கு வருகிறார்கள் – பெரும்பாலானவர்கள் ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் கனடாவிலிருந்து வருகிறார்கள்.
ஆனால் நிர்வாணமாக இருப்பதை விரும்பும் ஒரு பிரேசிலிய தம்பதியினருக்கு, விடுமுறையை கழிக்க கேப் டி ஏஜ் நகருக்கு வந்துள்ளனர்.
ஆர்தர் ஓ உர்சோ மற்றும் லுவானா கசாகி ஆகியோர் திருமணம் முடித்த பின் தங்கள் தேனிலவை கழிக்க வேண்டிய இடம் இது என்று முடிவு செய்தனர்.
மனித உறவுகள் பயிற்சியாளர்களாக பணிபுரியும் இந்த ஜோடி, கொவிட் லொக் டவுனில் பிற ஜோடிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி வருகிறார்கள்.
கேப் டி ஏஜ் அதன் குடிமக்களுக்கு வழங்கும் சுதந்திரத்திற்காக உலகின் மிக தாராளமய நகரங்களில் ஒன்றாக அறியப்படுகிறது, ஆனால் அந்த பகுதியில் பொது இடங்களில் பாலியல் உறவு தடை செய்யப்பட்டுள்ளது. பொது இடங்களில் பாலியல் உறவில் ஈடுபட்டு பிடிபட்டால் 15,000 டொலர் அபராதம் விதிக்கப்படுகிறது.




