வவுனியாவில் காயங்களுடன் மீட்கப்பட்ட சிறுவனின் மாதிரிகள் மொரட்டுவைக்கு அனுப்பி வைப்பு: சடலத்தை புதைக்குமாறு கூறி பெற்றோரிடம் ஒப்படைப்பு

Date:

வவுனியாவில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட 14 வயது சிறுவனின் உடல் கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக மொரட்டுவைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், சிறுவனின் உடல் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுவன் வீட்டின் பின்பகுதியில் தலையில் அடிப்பட்ட காயத்துடனும், கழுத்தில் வெட்டுக்காயத்துடனும் நேற்று (06) காலை சடலமாக மீட்கப்பட்டார். சிறுவனின் மரணம் தொடர்பில் சந்தேகம் வெளியிட்ட பொலிசார் வவுனியா தடவியல் பொலிஸாரின் உதவியுடன் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் சிறுவனின் சடலத்திற்கு பி.சீ.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்ட பின்னர் வவுனியா சட்ட வைத்திய அதிகாரி ஈ.ஜி.யூ.என்.குணரட்ண மற்றும் பொலிசார் முன்னிலையில் பிரேத பரிசோதனைக்கள் இடம்பெற்றிருந்தன.

இருப்பினும், மேலதிக தகவல்கள் தேவைப்பட்டமையால் சிறுவனின் உடல் கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக மொரட்டுவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனையடுத்து சிறுவனின் மரணம் தொடர்பில் சந்தேகம் உள்ளமையால் உடலை எரியூட்டாமல் புதைக்கவேன்டும் என சட்ட வைத்திய அதிகாரியால் தெரிவிக்கப்பட்டு சடலம், பெபெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

போதைப்பொருள் வாங்க வீட்டிலிருந்த தொலைக்காட்சியை விற்க முயற்சி: தடுத்த தாயை கொன்ற மகன்!

வத்தளை காவல் பிரிவுக்கு உட்பட்ட ஹெக்கிட்டவில், போதைப்பொருளுக்கு அடிமையான மகன் ஒருவன்,...

மடு விபத்தில் ஒருவர் பலி

மன்னார் - மடு பிரதான வீதியில் இன்று (18) அதிகாலை 5.45...

மட்டக்களப்பில் கடந்த 9 மாதத்தில் 92 பேர் தற்கொலை மீண்டும் அதிகரிக்கும் தற்கொலைகள்–

மட்டக்களப்பு நாவற்குடா பிரதேசத்தில் 44 வயது பெண் ஒருவர் வீட்டின் அறையின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்