சூப்பர் ஹிட் மலையாளப் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
மலையாளத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முகமது முஸ்தபா இயக்கத்தில் அன்னா பென், ஸ்ரீநாத் பாசி, மற்றும் ரோஷன் மேத்யூ இயக்கத்தில் வெளியான கப்பேலா திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்த படம் நேரடியாக நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் விமர்சன ரீதியாக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் சிறந்த திரில்லர் படம் பார்த்த அனுபவத்தையும் இப்படம் கொடுத்தது.
இந்நிலையில் கப்பேலா திரைப்படம் தற்போது தெலுங்கில் ரீமேக் ஆக இருப்பதாக கூறப்படுகிறது. தெலுங்கு ரீமேக்கில் சித்தூ ஜோன்னலகடா மற்றும் அர்ஜுன் தாஸ் இருவரும் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அன்னா பென் கதாபாத்திரத்தில் யார் நடிக்கப் போகிறார் என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரபல இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இந்தப் படத்தை இன்று துவக்கி வைத்தார்.
இந்தப் படத்தை சந்திரசேகர் ரமேஷ் இயக்குகிறார். சுவீகர் அகஸ்தி இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். சித்தாரா எண்டெர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கின்றனர்.இந்தப் படத்திற்கு புட்ட பொம்மா என்ற தலைப்பு வைப்பதாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அர்ஜுன் தாஸ் தற்போது வசந்தபாலன் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தை அடுத்து கப்பேலா தெலுங்கு ரீமேக்கில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




