மட்டக்களப்பு சிறைச்சாலைக்குள் கொரோனா தாண்டவம்!

Date:

மட்டக்களப்பு சிறைக்  கைதிகள்‌ 72 பேர்‌ உட்பட மட்டக்களப்பு மாவட்டத்தில்‌ 116 பேருக்கு கொரோனா வைரஸ்‌. தொற்று, நேற்று முன்தினம்‌ (05) உறுதி செய்யப்பட்டுள்ளதாக
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள்‌ பணிப்பாளர்‌ வைத்தியர்‌ நா.மயூரன்‌ நேற்று (06) தெரிவித்தார்‌.

அத்துடன்‌, கொரோனா தொற்றுக்‌ காரணமாக நேற்று, இருவர்‌ உயிரிழந்துள்ளனர்‌ எனவும்‌ அவர்‌ தெரிவித்தார்‌.

கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்றுவந்த ஆரையம்பதியைச்‌ சேர்ந்த ஒருவரும்‌, மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச்‌ சேர்ந்த ஒருவருமே மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளனர்‌.

மட்டக்களப்பு மாவட்டத்தில்‌ தொடர்ந்து எழுமாறாக அன்டிஜன்‌ மற்றும்‌ பி.சி.ஆர்‌ பரிசோதனைகள்‌ முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில்‌, மட்டக்களப்பு சிறைக்‌ கைதிகள்‌ 72 பேருக்கும்‌, பொலிலார்‌ இருவருக்கும்‌, மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில்‌ 15 பேரும்‌, களுவாஞ்சிக்குடி, ஆரையம்பதி, காத்தான்குடி ஆகிய சுகாதார வைத்திய அதிகாரிக பிரிவுகளில்‌ தலா ஒருவர்‌ என மூன்று பேருக்கும்‌, செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில்‌ 8 பேருக்கும்‌ தொற்று உறுதியாகியுள்ளது.

அத்துடன்‌, கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில்‌ 10 பேரும்‌, ஏறாவூர்‌ சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில்‌ 4 பேருக்கும்‌, பட்டிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில்‌ 2 பேர்‌ உட்பட 116 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது என
அவர்‌ மேலும்‌ தெரிவித்தார்‌.

spot_imgspot_img

More like this
Related

கிழக்கு பல்கலைக்கழக விடுதியில் மாணவி தற்கொலை அதனை கண்ட இரு மாணவிகள் மயங்கி வீழ்ந்தனர்- மாவட்டத்தில் 7 மாதத்தில் 84 தற்கொலை

கிழக்கு பல்கலைக்கழக கல்லடி சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி விடுதியில்...

காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களிடம் வாக்குமூலம் பதிவு

கோப்பாய் பிரதேச செயலகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தினரால் இன்று வாக்குமூலம் பெறும்...

சமூக விஞ்ஞானப் போட்டியில் தேசிய மட்டத்தை நோக்கி பயணிக்கும் லீடர் எம்.எச்.எம். அஷ்ரஃப் வித்தியாலய மாணவி இமானிக்கு கௌரவம்

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஷ்ரஃப் வித்தியாலயத்திலிருந்து சமூக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்