ஜூலை 12 முதல் அனைத்து அரச பாடசாலைகளின் ஆசிரியர்களுக்கும் கோவிட் -19 தடுப்பூசிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் அறிவித்துள்ளார்.
ஊடகங்களுடன் பேசிய கல்வி அமைச்சர், வயதைப் பொருட்படுத்தாமல் தடுப்பூசிகள் வழங்கப்படும் என்றார்.
சமீபத்தில் ஜனாதிபதியுடன் நடந்த கலந்துரையாடலின் போது ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போடும் முடிவு எட்டப்பட்டது.
அதன்படி, நாடு முழுவதும் உள்ள அனைத்து 10,155 பாடசாலைகளின் ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு தடுப்பூசி போட திட்டங்கள் செய்யப்பட்டுள்ளன.
பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான முதல் படியாக உடனடியாக ஆசிரியர்கள் முன்னுரிமைக் குழுவாகக் கருதப்பட்டு தடுப்பூசி போடப்படும் என்று கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் வலியுறுத்தினார்.




