கோப்பாயில் சுகாதார விதிமுறையை மீறி பொலிஸ் உத்தியோகத்தரின் பதிவு திருமணம்: 52 குடும்பங்கள் தனிமைப்படுத்தல்!

Date:

யாழ்ப்பாணத்தில் சுகாதார விதிமுறையை மீறி இடம்பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் பதிவு திருமண நிகழ்வில் கலந்து கொண்ட சுமார் 52 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கோப்பாய் சுகாதார வைத்திய அதிகார பிரிவில் கடந்த வாரம் பதிவு திருமணம் இடம்பெற்றது. பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் இந்த பதிவு திருமணத்தில் சுமார் 200 பேர் வரையில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதில் கலந்து கொண்ட ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 52 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், திருமண நிகழ்வில் கலந்து கொண்ட அச்சுவேலி பொலிஸ் நிலையத்தை சேர்ந்த 8 பொலிஸ் உத்தியோகத்தர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

திலீபன் சிலை வைத்தவர்கள் மீது சட்டமா அதிபர் வழக்கு தொடர்வார்!

தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்பின் உறுப்பினரான 'திலீபன்' என்றழைக்கப்படும் இராசையா...

ஈரான் உச்சதலைவரை சந்தித்தார் சபாநாயகர்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான மோதல் குறித்து விவாதிப்பதற்காக, ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர்...

உளறல் மன்னனுக்கு நாடாளுமன்றத்தில் கடும் எச்சரிக்கை!

நாடாளுமன்ற மரபுகளுக்கும் நிலையியல் கட்டளைகளுக்கும் (Standing Orders) அமையச் செயற்படுமாறு நாடாளுமன்ற...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்