கோபா அமெரிக்க கிண்ணம்: பெருவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது பிரேசில்!

Date:

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்று வரும் கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் அரையிறுதியில்பெருவை வீழ்த்திய பிரேசில் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

47வது தென் அமெரிக்க கால்பந்து தொடரின் இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் பிரேசில் அணி பெரு அணியை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்க கடுமையாக போராட வேண்டி இருந்தது.

இந்நிலையில் ஆட்டத்தின் 34 வது நிமிடத்தில் பிரேசில் அணியின் லூகாஸ் பக்வெட்டா தனது அணிக்கு முதல் கோலை அடித்தார். பெரு வீரர்களை போக்கு காட்டி பந்தை நகர்த்தி சென்ற நெய்மர் வழங்கி பந்தை கோலாக்கினார்.

அதன்பின் ஆட்டத்தின் இறுதி நேரம் வரை பெரு அணியினர் கோல் போட எடுத்த முயற்சிகளை சிறப்பான தடுப்பாட்டத்தினால் பிரேசில் அணியினர் தடுத்தனர்.

இதனால் ஆட்ட நேர முடிவில் பிரேசில் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

இந்நிலையில் நாளை நடைபெறும் மற்றொரு அரையிறுதியில் அர்ஜெண்டினா அணி கொலம்பியாவை எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெறும் அணி வரும் 11ஆம் திகதி நடைபெறும் இறுதிப் போட்டியில் பிரேசில் அணியுடன் மோதவுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

பிரதியமைச்சர் எரங்க குணசேகர, ஜகத் மனுவர்ண எம்.பிக்கு பிடியாணை

நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்...

தன்னைத்தானே சுட்டு உயிர்மாய்த்த முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி விக்ரமரத்ன உயிரிழந்தார் துப்பாக்கிச் சூட்டு காயத்துடன்...

13வது வாரமாகவும் தொடரும் வலி. வடக்கு காணி மீட்புப் போராட்டம்

வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்