15 வயது சிறுமி ஒருவரை இணையத்தினூடாக பாலியல் நடவடிக்கைகளுக்காக விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
33 வயதுடைய பெண் ஒருவரும் இருதய வைத்திய நிபுணர் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பிற்கு அருகில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் கடமையாற்றும் குறித்த வைத்தியர் பண்டாரகம பகுதியில் வைத்து இன்று (6) காலை கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பணம் கொடுத்து சிறுமியை பெற்று, துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளார்.
மற்ற சந்தேக நபர் நேற்று இரவு கிரிவட்டுடுவ பகுதியில் கைது செய்யப்பட்டார்.
இணையத்தின் ஊடாக குறித்த சிறுமியை பெற்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக குறித்த நபருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது
குறித்த இருவருடன் இதுவரையில் இந்த சம்பவம் தொடர்பில் 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக .