சட்ட விரோதமான முறையில் இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக மன்னாரிற்கு கடத்தி வரப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்ட ஒரு தொகுதி உலர்ந்த மஞ்சள் மூடைகள் நேற்று திங்ட்கட்கிழமை (5) மாலை தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு மாத கால பகுதியில் மன்னார் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பகுதியில் மீட்கப்பட்ட குறித்த உலர்ந்த மஞ்சள் கட்டி மூடைகள் இவ்வாறு அழிக்கப்பட்டுள்ளது.
இதன் போது 28 மூடைகளில் பொதி செய்யப்பட்ட 777 கிலோ 600 கிராம் உலர்ந்த மஞ்சள் சுகாதார நடை முறைக்கு அமைவாக தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளது.
மன்னார் பொலிஸாரினால் மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி தாரபுரம் காட்டு பகுதியில் வைத்து தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளது.
இதன் போது உதவி பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் மன்னார் பொலிஸார் குறித்த பகுதிக்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1