மன்னாரில் தடுப்பூசி பெறுவதில் மக்கள் ஆர்வம்

Date:

மன்னார் மாவட்டத்தில் வசிக்கும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான கொரோனா தொற்று தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை 2 ஆவது நாளாக இன்று செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதிக எண்ணிக்கையான மக்கள் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள ஆர்வம் காட்டியுள்ளனர்.

மன்னார் ஆடைத் தொழிற்சாலை பிரதான வீதியில் அமைந்துள்ள பொது மண்டபத்தில் தடுப்பூசி 2 ஆவது நாளாகவும் செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் போது கிராம அலுவலகர் பிரிவுகள் ஊடாக ஒதுக்கப்பட்ட நேரங்களுக்கு அமைய செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றது.

இதேவேளை இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (6) நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் முருங்கன் பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

நீர்கொழும்பு சிறைக்கலவரத்தில் காயமடைந்த மேலும் 2 சிறை உத்தியோகத்தர்கள் பலி

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த மோதலில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை...

பெற்றோரை அடித்துக்கொன்ற மகன்

எம்பிலிப்பிட்டிய பகுதியில் போதைக்கு அடிமையான மகன், நேற்று முன்தினம் (13) இரவு...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்தாரியின் வாக்குமூலம் பதிவு

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட ஷங்ரி-லா ஹோட்டல் குண்டுதாரியான முகமது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்