புகுந்த வீட்டிற்கு ஊர் தலைவராக தேர்வு செய்யப்பட்டு ஹெலிகாப்டரில் வந்திறங்கிய மருமகள்!

Date:

உ.பி மாநிலம் படாவுன் வேத்ராம் லோதி என்ற கிராமத்தில் பா.ஜ. கட்சியின் துணை தலைவராக இருப்பவரின் மகள் சுனிதா வர்மா, இவர், ஓமேந்திர சிங் என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் கடந்த டிசம்பர் மாதம் பதிவுத்திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் சுனிதா தனது கணவர் ஒமேந்தரின் சொந்த ஊரான பெய்ராலி மாவட்டம் ஆவுன்லா டவுண் பகுதியில் உள்ள ஆலம்பூர்கோட் என்ற இடத்தில் கிராமத் தலைவருக்கான தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் வெற்றி பெற்ற பின்பு தான் கணவருடன் சேர்ந்து வாழ்வேன் என சபதம் எடுத்திருந்தார்.

அதன் படி தேர்தல் வந்தவும் அந்த கிராம தலைவர் போட்டிக்கு விருப்பமனு தாக்கல் செய்தார் அதன் பின்பு சுனிதா தனக்கு வாக்கு கேட்டு ஒருவர் வீட்டிற்கு கூட செல்லவில்லை. ஆனால் அவருக்கு பதிலாக அவரது கணவர் ஒவ்வொரு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். அதன் பலனாய் சுனிதா அந்த தேர்தலில் அபார வெற்றி பெற்றார். ஓமேந்திர சிங்கின் தந்தை அதே பகுதியில் முன்னாள் பிளாக் தலைவராக இருந்து வந்தார். அதே இடத்தில் இதற்கு முன்னர் இருமுறை கிராம தலைவராக இருந்தது. ஓமேந்திர சிங்கின் தாயார் தான்.

இவர் தலைவராக தேர்வு செய்யப்பட்ட பின்பு ஏற்கனவே சுனிதாவிற்கும், ஓமேந்தர சிங்கிற்கும் சட்டபூர்வமாக திருமணமாகியிருந்தாலும் இந்து திருமண முறைப்பட கடந்த வாரம் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு மணப்பெண் சுனிதா ஹெலிகாப்டர் மூலம் அந்த கிராமத்திற்கு தலைவராகவும், மருமகளாகவும் சென்று இறங்கினார். இந்த சம்பவம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மீனவரின் வலையில் சிக்கிய சடலம்

மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் கீழ் வாவியில் மீனவர் வலையில் சிக்கிய நிலையில்...

நிதியமைச்சர் ஆனார் செங்கோட்டையன்: முதல்வர் விஜய், 9 அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு

தமிழக அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் செங்கோட்டையனுக்கு...

வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட மேலதி வரி குறித்து விளக்கம்!

வாகன இறக்குமதி மீது விதிக்கப்பட்டுள்ள 50% மேலதிக வரி (Surcharge) குறித்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்