செந்தூரப்பூவே சீரியலில் ப்ரியா ராமன்; செம்பருத்தி மகா சங்கமம் என ரசிகர்கள் கிண்டல்!

Date:

விஜய் டிவியின் செந்தூரப்பூவே சீரியலில் ஹீரோவாக ரஞ்சித் நடித்து வருகிறார். பரபரப்பாக ஓடிகொண்டிருக்கும் இந்த சீரியலின் பிளாஷ் பேக் காட்சிகள் இந்த வாரம் ஒளிபரப்பாக உள்ளது.அதில் பிரியா ராமன் தான் ரஞ்சித்தின் ஜோடியாக வருகிறார்.

ரஞ்சித் மற்றும் ப்ரியா ராமன் இருவரும் நிஜ வாழ்க்கையில் திருமணம் செய்துக்கொண்டனர். அதன் பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுவிட்டனர். ஆனால் அவர்கள் மீண்டும் ஒன்றாக சேர்ந்து ஜோடியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்து இருந்தனர். அதனால் அவரகள் ஒன்று சேர்ந்துவிட்டார்கள் என்கிற தகவல் பரவியது. அவர்களும் அது பற்றி வாயைதிறக்கவில்லை.

இந்த நிலையில் தான் தற்போது ப்ரியா ராமன் செந்தூரப் பூவே சீரியலில் கெஸ்ட் ரோல் நடிக்க வந்திருக்கிறார். துரை சாரும் அருணா அக்கா (ப்ரியா ராமன்) இருவரும் வாழ்ந்த வாழ்க்கை பற்றி தெரிந்துகொள்ள ஆசையாக இருக்கிறது என ரோஜா கேட்க பிளாஷ்பேக் பகுதிகள் வருகிறது.அருணாவிடம் கோவிலில் சில ரௌடிகள் வம்பு செய்கின்றனர். அப்போது துரை அவர்களை அடித்து துவைத்து அவரது காலில் விழ வைக்கிறார்.இப்படித் தான் அவரகள் இடையே அறிமுகம் ஏற்படுகிறது.

இந்த பிளாஷ் பேக் பகுதியின் ப்ரொமோ வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் “செம்பருத்தியும் செந்தூரப்பூவும் மாகா சங்கமம் போல” என கிண்டல் செய்து வருகிறார்கள். செந்தூரப்பூவுல எப்படி செம்பருத்தி வந்துச்சி என சிலர் கேள்வியும் கமெண்டில் கேட்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

அர்ச்சுனாவுக்கு பிடியாணை

யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனைக் கைது செய்வதற்கான பிடியாணை...

உயர்தர அனுமதி அட்டை திருத்தம் ஆகஸ்ட் 3 வரை திறந்துள்ளது

உயர்தர அனுமதி அட்டை திருத்தம் ஆகஸ்ட் 3 வரை திறந்துள்ளது 2026 ஆம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்