கிச்சன் கழிவுகள் மூலம் பேப்பர்.. 10 வயது சிறுமி சாதனை!

Date:

பெங்களூருவை சேர்ந்த 10வயது சிறுமி வீட்டில் உள்ள காய்கறி கழிவுகளை வைத்து பேப்பர் தயாரித்துள்ளது. இது குறித்த முழு தகவல்களை கீழே காணுங்கள்

நீண்ட நாள் உழைக்கும் பொருள், மறு சுழற்சி முறை தான் இந்த உலகில் நம்மை இன்னும் நீண்ட காலம் வாழ வைக்கும். இயற்கை வளங்களை தொடர்ந்து சுரண்டிக்கொண்டேயிருந்தால் நம் எதிர்காலம் ஆபத்தாக அமையலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இப்படி மறுசுழற்சி முறை முக்கியமா மாறி வரும் இந்த வேலையில் மறுசுழற்சியில் உங்களை வியக்க வைக்கும் வகையில் 10 வயது சிறுமி ஒரு சாதனையை படைத்துள்ளார்

கர்நாடக மாநிலம் பெங்களூரு பிடிஎம் பகுதியைச் சேர்ந்தவர் மான்யா ஹர்ஷா 10 வயதாக இவர் வீட்டின் கிச்சனில் உள்ள கழிவுகளை கொண்டு கையால் தயாரிக்கப்பட்ட வெஜிடேபிள்ள பேப்பரை உருவாக்கியுள்ளார்.

இந்தியாவில் சராசரியாக ஒவ்வொரு வீடுகளிலும் தினமும் 300 கிராம் காய்கறிகள் வீணாகுகிறது. இதை தெரிந்து கொண்ட மான்யா இப்படியாக வீணாகும் காய்கறிகளை வைத்து உபயோகமாக ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தார். அதற்காக அவருக்கு கிடைத்த விஷயம் தான் கையால் தயாரிக்கப்பட்ட பேப்பர்.

வீட்டில் மீதமாகும் காய்கறிகளை வைத்து பேப்பர் தயாரித்துள்ளார். காய்கறிகள் மட்டுமல்லாமல் வீட்டில் உள்ள செடிகளின் கழிவுகளையும் வைத்து பேப்பர் தயாரித்துள்ளார். இது குறித்து அவர் கூறும்போது : “1000 பவுண்ட் பேப்பர் தயாரிக்க 8 மரங்கள் வெட்டப்படுகின்றன. 8-10 வெங்காய இழைகளை கொண்டு 2-3 ஏ4 சைஸ் பேப்பர் தயாரிக்க முடியம். 0.5 கிலோ பட்டாணி தோள்களை கொண்டு 3 ஏ4 சைஸில் பேப்பர் தயாரிக்க முடியும். 2-3 பேபி கார்ன் கழிவுகளை வைத்து 2 ஏ4 பேப்பர் தயாரிக்க முடியும். இந்த பேப்பர்கள் கலர் கலராக இருக்கும். இதில் எழுதலாம். வரையலாம், மடக்கலாம் சாதாரண பேப்பர் போலவே பயன்படுத்தலாம். பேப்பருக்காக மரங்களை வெட்டுவதை விட நம் வீட்டில் உள்ள கழவுகளையே பயன்படுத்தலாம். நாம் எல்லோரும் சேர்ந்து தான் இந்த உலகை மீட்டெடுக்க முடியும். ” என கூறினார்.

இந்த 10 வயது சிறுமிக்கு இருக்கும் அக்கறையை பலர் பாராட்டி வருகின்னறர். பலர் இந்தசிறுமியை ஐடியாவை எப்படி முயற்சிப்பது என ஆலோசித்து வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

வடக்கு கிழக்கில் தமிழ் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது என்றார் இந்திய துணை ஜனாதிபதி: சீ.வீ.கே தகவல்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையைக்...

இயந்திர கோளாறு காரணமாகவே தனியார் பேருந்தில் இருந்து பயணிகள் இறக்கப்பட்டார்களாம்!

பயணிகளை இடைநடுவில் தனியார் பேருந்து இறக்கியதாக சமூக வலைத்தளங்களில் எழுந்த குற்றச்சாட்டுத்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்