கனடாவில் பயங்கர விபத்து; சம்பவ இடத்திலேயே பலியான தமிழ் இளைஞன்!

Date:

கனடாவின் ஸ்கார்பாரோ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தை பின்னணியாக கொண்ட 23 வயது இளைஞன் உயிரிழந்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1:30 மணிக்குப் பின்னர் விபத்து நடந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

Acura வாகனத்தின் ஓட்டுநர் கிங்ஸ்டன் சாலையில் மேற்கு நோக்கி பயணித்துக் கொண்டிருந்தார். அவர் ஷெப்பார்ட் அவென்யூ கிழக்கு மற்றும் போர்ட் யூனியன் சாலையில் சந்திக்கும் இடத்தில் வடக்கு நோக்கி சென்ற TTC  பேருந்து மீது மோதினார்.

அஸ்வின் சந்திரராஜ் என்ற 23 வயது இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரழந்தார்.

அவர் சிவப்பு ஒளி சமிக்ஞை விளக்கை மீறி வாகனத்தை செலுத்தி சென்று விபத்தில் சிக்கியதாக பொலிசார் தெரிவித்தனர்.

விபத்து நடந்த போது, TTC  பேருந்தில் பயணிகள் இருக்கவில்லை. 61 வயதான சாரதி சிறிய காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

spot_imgspot_img

More like this
Related

13வது வாரமாகவும் தொடரும் வலி. வடக்கு காணி மீட்புப் போராட்டம்

வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை...

BYD கார் காட்சியறை திறப்பு மட்டக்களப்பு

ஜோன் கீல்ஸ் சிஜி ஆட்டோ நிறுவனத்தின் BYD கார் விற்பனை நிலையத்தின்...

காரைதீவில் பாரம்பரிய உணவுகளை அறிமுகப்படுத்தும் “மக்கள் உணவகம்” திறப்பு

காரைதீவு கல்முனை பிரதான வீதியில், காரைதீவு பிரதேச செயலகத்திற்கு எதிரில், "1967...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்