இந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 39,796 பேருக்கு தொற்று!

Date:

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,97,00,430 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 42,352 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,796 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 3,05,85,229 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் ஒரே நாளில் 723 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,02,728 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,97,00,430 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 42,352 பேர் குணமடைந்துள்ளனர்.

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 4,82,071 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நாடு முழுவதும் நேற்று வரை பொதுமக்களுக்கு 35,28,92,046 கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

 

spot_imgspot_img

More like this
Related

கிளிநொச்சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கத்திக்குத்து!

கிளிநொச்சி நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிற்குள் நேற்றிரவு (10) 8.00...

வாகரை தோணிதாண்டமடு பிரச்சனை தொடர்பாக கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட எல்லைக்...

பட்டிமன்ற நடுவரும், பேராசிரியருமான சாலமன் பாப்பையா மறைவு

மதுரையைச் சேர்ந்த தமிழ் ஆர்வலரும், பட்டிமன்ற நடுவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்