இங்கிலாந்து ஒருநாள் அணி தனிமைப்படுத்தப்பட்டது!

Date:

இங்கிலாந்து அணியில் ஏழு பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான புதிய அணியைத் தேர்வு செய்யும் நெருக்கடியில் இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் சிக்கியுள்ளது.

மூன்று இங்கிலாந்து வீரர்கள் மற்றும் நான்கு அணியுடன் தொடர்புடைய ஊழியர்கள் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

இதையடுத்து, அணி வீரர்கள் அனைவரும் நெருங்கிய தொடர்புடையவர்கள் என்ற அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி வியாழக்கிழமை ஆரம்பிக்கவுள்ளது.

காயம் காரணமாக பல வாரங்களாக ஓய்வில் இருந்த பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து அணிக்குத் திரும்புவார். பாகிஸ்தானிற்கு எதிரான அணியின் ஏனைய வீரர்கள் இனி பெயரிடப்படுவார்கள்.

கொரோனா தொற்றிற்குள்ளான இந்த 3 வீரர்களும் இலங்கைக்கு எதிராக ஒரு நாள் தொடரில் விளையாடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

spot_imgspot_img

More like this
Related

நாடு முழுவதும் ‘ரடம ஏகட்ட’ விசேட நடவடிக்கை – 700-க்கும் மேற்பட்டோர் கைது

நாடு முழுவதும் நேற்று (ஜூலை 17) முன்னெடுக்கப்பட்ட ‘ரடம ஏகட்ட’ (Ratama...

பிரேத பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு

கல்முனை - மட்டக்களப்பு பிரதான வீதி, மருதமுனை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு...

கடும் வெப்பம்: பல பகுதிகளில் எச்சரிக்கை நிலை

இன்று (18) கிழக்கு மாகாணம் மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்