கோண்டாவில் கொடூர வாள்வெட்டிற்கு காரணம் என்ன?: திடுக்கிட வைக்கும் காரணங்கள்!

Date:

கோண்டாவிலில் கொலைவெறி தாக்குதல் நடத்திய ரௌடிகள் 3 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். பதுங்கியிருந்தவர்களை யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் நேற்று அள்ளிச் சென்று விட்டனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த கொடூர தாக்குதல் ஏன் நடத்தப்பட்டது என்ற அதிர்ச்சி காரணத்தை வெளியிட்டுள்ளனர்.

கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோண்டாவில், செல்வபுரம் பகுதியில் வீடொன்றில் ஒளிப்பதிவு கலையம் அமைந்திருந்தது. திருகோணமலையை சேர்ந்த ஒருவர் அதனை நடத்தி வந்தார். அவர் இசைக்கலைஞரும் கூட. அங்கு குவியும் இளைஞர்கள் ரிக்ரொக் வீடியோக்களும் தயாரித்தனர்.

கடந்த ஜூன் 30ஆம் திகதி இரவு. கையில் வாள்கள், கொட்டன்களுடன் புகுந்த ரௌடிக்குழு அங்கிரு்தவர்களை சரமாரியாக வெட்டி வீழ்த்தி விட்டு தலைமறைவாகி விட்டனர்.
ஒரு இளைஞனிற்கு மணிக்கட்டு துண்டிகக்ப்பட்டு, பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியகாலையில் கை பொருத்தப்பட்டது.

இது தொடர்பில் தலைமறைாக இருந்த 3 ரௌடிகள் நேற்று கைதாகினர்.

அர்களிடம் டத்த்பட்ட விசாரணையிவ் பல திடுக்கிடும் தகவல்கள் வௌயாகியுள்ளன.

ஆவாகுழு ரௌடிகளே இந்த வாள்வெட்டை நடத்தியுள்ளனர்.

ஆவா குழுவில் அங்கம் வகித்த கோபி என்பவர் பிரிந்து சென்று, தனுரொக்கின் அணியுடன் செயற்பட்டுள்ளார். அவர் செல்வபுரத்திலுள்ள ஒளிப்பதிவு கலையகத்தில் இரவுகளில் தங்குவதாக கிடைத்த தகவலையடுத்து, அவரை குறிவைத்து ரௌடிகள் அன்றிரவு தாக்குதலுக்கு நுழைந்துள்ளார்.

கோபி அங்கு நிற்கிறார் என்ற நம்பிக்கையில் சென்ற ரெடிளகளுக்கு , அவர் அங்கில்லாதது பொல்லாத கோபத்தை எற்படுத்திள்ளது. இதனால் அப்பாவிகள் வாள்வெட்டிற்கு இலக்காகினர்.

வாள் வெட்டினால் ஒரு இளைஞனின் மணிக்கட்டு துண்டாகி, யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் மீள பொருத்தப்பட்டது. அந்த இளைஞன், ஆவா ரௌடிகள் தேடிச்சென்ற இளைஞனின் நெருங்கிய சகா. அதனாலேயே இந்த கொலைவெறி தாக்குதலை அவர் மீது நடத்தியுள்ளனர்.

ரௌடிகள் ஒரு குழுவாக இயங்கி, அதிலிருந்து ஒருவர் பிரிந்து சென்றால் பழிவாங்க, போட்டிக்குழுக்களின் உறுப்பினர்கள் பொழுதுபோகாமல் பேஸ்புக் சட்டிங்கில் ஏட்டிக்கு போட்டியாக சவடால் விட்டு, போட்டிக்குழு ஆதரவாளர்களை மிரட்ட என, அற்பசொற்ப காரணங்களினாலேயே இந்த வாள்வெட்டு சம்பவங்கள் பதிவாகி, பொதுமக்களை பெரும் பீதிக்குள்ளாக்கியுள்ளது.

இந்த குழுக்களை இரும்புகரம் கொண்டு நசுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.

spot_imgspot_img

More like this
Related

இலங்கையின் முதல் ரோபோ அறுவை சிகிச்சை

இலங்கை தனது முதல் செயற்கை நுண்ணறிவு உதவியுடனான ரோபோ அறுவை சிகிச்சைகளை...

அதிகாரமற்று கூடும் தலைவர்கள்; உலமா கட்சித் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் சாடல்

நீண்டகாலமாகப் பல்வேறு ஆட்சிகளில் அங்கம் வகித்து, அதிகாரத்தில் இருந்த அரசியல் தலைவர்கள்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்