கதாநாயகனாக அறிமுகமாகும் இசையமைப்பாளர் டிஎஸ்பி!

Date:

புதிய படத்தின் மூலம் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் கதாநாயகனாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

சினிமாவில் நடிகர் அல்லாதோர் பிரபலம் அடைந்து விட்டால் அதன் பிறகு நடிப்பில் களமிறங்குவது ஒன்றும் புதிதல்ல. இயக்குனராக இருந்து நடிகர்கள் ஆனவர்கள் தயாரிப்பாளர்களாக இருந்து நடிகர்கள் என்ற வரிசையில் இசையமைப்பாளராக இருந்து நடிகர்கள் ஆனவர்களுக்கு பலர் உள்ளனர். விஜய் ஆண்டனி ஜிவி பிரகாஷ் உள்ளிட்டோர் இசையமைப்பாளராக இருந்து தற்போது வெற்றிகரமாக நடிகராகவும் வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.

அந்த வரிசையில் தற்போது பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தும் இணைந்துள்ளார். அவர் விரைவில் கதாநாயகனாக அறிமுகமாக இருப்பதாக கூறப்படுகிறது.

நடிகை சார்மி புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கி படங்களைத் தயாரிக்க ஆரம்பித்துள்ளார். பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்து வரும் லைகர் படத்தை சார்மி தான் தயாரித்து வருகின்றனர். அடுத்ததாக தேவிஸ்ரீ பிரசாத் ஹீரோவாக அறிமுகமாகும் படத்தை அவர் தயாரிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்புவதாக மோசடி: முல்லைத்தீவு செய்தியாளர் கைது!

வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்புவதாக குறிப்பிட்டு நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், முல்லைத்தீவு...

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்கவின் சகோதரர் கைது!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்கவின் சகோதரரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான...

கபிலசந்திரசேனவின் மனைவிக்கு பிடியாணை

ஏர்பஸ் பரிவர்த்தனை தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, முன்னாள் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்