கணவரை கலாய்க்கும் நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த ப்ரியா அட்லி!

Date:

சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் உரையாடிய போது இயக்குனர் அட்லியின் ஹேட்டர்ஸ்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார் ப்ரியா அட்லி.

நடிகர் விஜய்க்கு தொடர்ந்து மூன்று ஹிட் திரைப்படங்களை கொடுத்து கோலிவுட் சினிமாவில் தடம் பதித்ததோடு மட்டுமல்லாமல், நடிகர் விஜய் ரசிகர்களின் பேவரைட் டைரக்டர் என சொல்லப்படும் அளவிற்கு பிரபலமானவர் இயக்குனர் அட்லி. இவர் தற்போது இந்தியில் ஷாருக்கானை வைத்து படம் இயக்குவதில் பிசியாக உள்ளார். இந்நிலையில் அட்லியின் ஹேட்டர்ஸ்களுக்கு அவரது மனைவி ப்ரியா இன்ஸ்டாகிராமில் பதில் அளித்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ராஜா ராணி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான அட்லி, அதனை தொடர்ந்து தெறி, மெர்சல், பிகில் ஹிட் படங்களை தனது முன்னணி இயக்குனராக வரிசையில் இடம் பிடித்தார். ஷங்கரின் உதவி இயக்குனர் என்ற அடையாளத்தோடு அறிமுகமான அட்லி, இன்று தனக்கென ஒரு அடையாளத்தை சம்பாரித்து வெற்றி இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

என்னதான் பிளாக்பஸ்டர் இயக்குனர் என்று பலராலும் பாராட்டப்பட்டாலும், சமூக வலைதளங்களில் அதிகமாக ட்ரோல் செய்யப்படுபவரும் இயக்குனர் அட்லி. இதுவரை வெளியான இவரின் நான்கு திரைப்படங்களும் பழைய படங்களின் கதைக்களங்களை வைத்தே இயக்கப்பட்டது என்கின்ற குற்றச்சாட்டும் இவர் மீதுள்ளது.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அட்லியின் மனைவி ப்ரியா, ரசிகர்களிடம் உரையாடிய போது அட்லியின் ஹேட்டரஸ் குறித்த கேள்விக்கு நறுக்கென்று பதில் அளித்துள்ளார். அதாவது அட்லியின் ஹேட்டர்ஸ்கள் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்று ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்ப, அதற்கு ப்ரியா அட்லி, ‘எங்கள் மீது இன்னும் அதிக அன்பு கொண்டுள்ளவர்களுக்கு எனது நன்றி. அன்பை பரப்புவோம்’ என பதிலளித்துள்ளார்.

அட்லி இயக்கத்தில் கடைசியாக விஜய் நடிப்பில் பிகில் திரைப்படம் வெளியானது. தற்போது இந்தியில் ஷாரூக் கான் நடிக்கவுள்ள படத்தை இயக்குவதில் மும்முரமாக உள்ளார். இதன் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகவுள்ளார் அட்லி. இந்தப் படத்தின் டெஸ்ட் ஷூட் முடிவடைந்துள்ள நிலையில், விரைவில் படப்பிடிப்பு துவங்கப்படும் என எதிர்பாக்கப்படுகிறது

spot_imgspot_img

More like this
Related

சீன தயாரிப்பு லேபிள்களை ஒட்டி மோசடி: தெஹிவளையில் அம்பலமான காலணி மோசடி!

தெஹிவளை, கவ்தானாவில் உள்ள ஒரு ரகசிய காலணி உற்பத்தி மற்றும் அசெம்பிளி...

கை,கால் நடுங்க தூக்கி வரப்பட்ட மஹிந்த: மரணிக்கும் முன் நாமலை ஜனாதிபதியாக்க வேண்டுமாம்!

அனுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ‘ஜன சதன’ (மக்கள் போராட்டம்)...

அராலிச்சந்தி வாள்வெட்டு: நால்வர் கைது!

ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் மீது அராலிச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்