Pagetamil
இந்தியா விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் : வரும் 14 ஆம் திகதி முதல் இந்திய வீரர்கள் பயணம்!

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் வரும் 14 ஆம் திகதி முதல் டோக்கியோ செல்ல உள்ளனர்.

நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகள் சென்ற வருடம் ஜப்பான் நாட்டில் நடைபெறுவதாக இருந்தது. கொரோனா பாதிப்பு காரணமாக அது ஒத்தி வைக்கப்பட்டது. இதையொட்டி வேறு சில நாடுகளில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்துவது பற்றி பரீசிலிக்கப்பட்டது.

ஆனால் ஜப்பான் இந்த வருடம் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதாகத் தெரிவித்தது. இந்த போட்டிகள் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெற உள்ளன. இதையொட்டி அனைத்து நாடுகளிலும் இந்த போட்டிகளில் கலந்து கொள்ள விளையாட்டு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்திய வீரர்களும் இதில் பங்கேற்கின்றனர்.

இவர்கள் முதல் கட்டமாக வரும் 14 ஆம் திகதி அன்று முதல் கட்டமாகத் தனி விமானத்தில் டோக்கியோ செல்ல உள்ளனர். மீதமுள்ளோர் பிறகு 18 மற்றும் 20 ஆம் திகதிகளில் அடுத்தடுத்து டோக்கியோ செல்ல உள்ளனர் என இந்திய ஒலிம்பிக் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

போதைப் பொருள் கடத்தல் வழக்கு: நடிகர் மன்சூர் அலிகான் மகனுக்கு நிபந்தனை ஜாமீன்

Pagetamil

நடிகர் அல்லு அர்ஜுனுக்கு மீண்டும் நோட்டீஸ்

Pagetamil

தமிழகத்தில் வாக்காளர் அதிகரிப்பு

Pagetamil

ஆளுநர் வெளிநடப்பு முதல் குரல் வாக்கெடுப்பு தீர்மானம் வரை: தமிழக சட்டப் பேரவைச் சர்ச்சை!

Pagetamil

இந்திய இராணுவ வீரர்கள் இறப்பு

east tamil

Leave a Comment