இராணுவத்தினரால் புதிதாக நிர்மானிக்கப்பட்ட 20 லட்சம் பெறுமதியான வீடு பயனாளிகளிடம் இன்று கையளித்தப்பட்டது.
குறித்த நிகழ்வு இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்றது. கிளிநொச்சி இராணுவ கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் எச்.பி.ரணசிங்கவின் ஆலோசனைக்கு அமைவாக 57வது படைப்பிரிவினால் குறித்த வீடு புதிதாக நிர்மானிக்கப்பட்டது.
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிருஸ்ணபுரம் பகுதியில் வாழும் கூலித்தொழிலாளி குடும்பமான அரியதாஸ் ரமேஸ் என்ற 4 அங்கத்தவர் கொண்ட குடும்பத்திற்கு இவ்வாறு இராணுவத்தினரால் 20 லட்சம் பெறுமதியில் வீடு நிமாணித்து இன்று கையளிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் கிளிநொச்சி இராணுவ கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் எச்.பி.ரணசிங்க கலந்துகொண்டு வீட்டினை குடும்பத்தினரிடம் கையளித்தார். தொடர்ந்து தமிழர் பாரம்பரிய முறையில் பால் காய்ச்சப்பட்டது.
குறித்த வீட்டினை நிர்மானித்த இராணுவ வீரர்களிற்கு சான்றிதழ்களும் இதன் போது வழங்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து குடும்பத்தினருக்கான உருணவு பொதிகளும், அன்பளிப்புகளும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.