முத்துராஜவெலவில் தொடக்கூடாது: அரசை எச்சரித்த கர்தினல்!

Date:

முத்துராஜவெல ஈரநிலத்தின் 100 ஏக்கருக்கும் அதிகமான நிலங்களை நிரப்பவும், அங்கு திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (எல்.என்.ஜி) மின்நிலையத்தை உருவாக்கவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்றும், இதுபோன்ற சுற்றுச்சூழல் பேரழிவை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது என்றும் கொழும்பு பேராயர் கர்தினல் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் திட்டங்கள் அபிவிருத்தி திட்டங்கள் அல்ல. அவை அழிவுகரமானவை என்றும், முத்துராஜவெலவைத் தொடக்கூடாது என்று அவர் மீண்டும் அரசாங்கத்திற்கு அறிவிப்பார் என்றும் கர்தினல் கூறினார்.

இந்த திட்டம் குறித்த சுற்றுச்சூழல் அதிகாரசபையின் அறிக்கையில் பல அடிப்படை சட்ட பலவீனங்கள் இருப்பதாக பேராயர் கூறினார், மேலும் அவர் எதிர்ப்பு தெரிவிக்க மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபைக்கு கடிதம் எழுதியுள்ளார் என்றார்.

கொழும்பு துறைமுக நகரம், பல்நோக்கு போக்குவரத்து மையம் மற்றும் கடல் நகர திட்டத்திற்கான மின்சாரம் பெற இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் கர்தினல் கூறினார்.

இன்று (5) பொரளையில் உள்ள பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

100 ஏக்கர் முத்துராஜவெல ஈரநிலத்தை கடல் மணலால் நிரப்புவது கடல் சூழலுக்கும், முத்துராஜவெலவைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் கடுமையான வெள்ள அச்சுறுத்தல்களை ஏற்படுத்தும் என்றும், இப்பகுதியில் உள்ள மக்கள் எதிர்காலத்தில் ஒரு படகை வீட்டில் வைத்திருக்க வேண்டும் என்றும் கர்தினல் கூறினார்.

சுற்றுச்சூழல் அதிகாரசபை பொதுமக்களிற்கு கருத்து தெரிவிக்க வாய்ப்பளிக்ாமல் இரகசிய முயற்சியாக செயற்படுத்த முயற்சியாகத் தோன்றுகிறது என்றார்.

spot_imgspot_img

More like this
Related

இந்திய- நேபாள எல்லை காட்டுக்குள் கைதான யாழ்ப்பாணத்தவர்கள்

இந்தியா-நேபாள எல்லையில் உள்ள பஹ்ரைச் மாவட்டத்தில், ரஜ்ஜன்வா சோதனைச் சாவடிக்கு அருகில்,...

ஈரான் மீது விரைவில் மற்றொரு தாக்குதல்: ட்ரம்ப் அறிவிப்பு!

போர் எட்டு மாதங்களை நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையிலும், எரிபொருள் விலை உயர்வு அமெரிக்க...

மன்மதராசாவுக்கு விளக்கமறியல்

இளம் பெண் ஒருவரைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்