சைக்கிளிங் சென்ற முதல்வருடன் செல்பி எடுத்துக் கொண்ட நடிகை.. வைரலாகும் புகைப்படம்!

Date:

நடிகை யாஷிகாஆனந்த் முதல்வர் முக ஸ்டாலின் சைக்கிளிங் சென்றபோது அவருடன் எடுத்துக் கொண்ட செல்பி இணையத்தில் வைரலாகி வருகிறது.

முதல்வர் முக ஸ்டாலின் சைக்கிளிங் செல்வது வழக்கம். உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள அவர் சைக்கிளிங் செல்வதுண்டு. பெரும்பாலும் சென்னை கடற்கரை சாலை, ஈசிஆர் சாலையில் சைக்கிளிங் மேற்கொள்வோர். முதல்வரான பிறகும் வழக்கமாக சைக்கிளிங் செல்வதை கடைபிடித்து வருகிறார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் முதல்வர் முக ஸ்டாலின் கிழக்கு கடற்கரை சாலையில் சைக்கிளிங் மேற்கொண்டார். அவருக்கு அதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோவளம் முதல் மாமல்லபுரம் வரை அவர் சைக்கிளிங் செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நடிகை யாஷிகா முதல்வர் முக ஸ்டாலின் சைக்கிள் சென்றபோது அவருடன் செல்பி எடுத்துள்ளார். அந்தப் புகைப்படத்தை யாஷிகா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

spot_imgspot_img

More like this
Related

நீர்கொழும்பு சிறைக்கலவரத்தில் காயமடைந்த மேலும் 2 சிறை உத்தியோகத்தர்கள் பலி

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த மோதலில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை...

பெற்றோரை அடித்துக்கொன்ற மகன்

எம்பிலிப்பிட்டிய பகுதியில் போதைக்கு அடிமையான மகன், நேற்று முன்தினம் (13) இரவு...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்தாரியின் வாக்குமூலம் பதிவு

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட ஷங்ரி-லா ஹோட்டல் குண்டுதாரியான முகமது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்