டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வேவர்லி தோட்டத்தை அண்மித்த பகுதியில் உள்ள ஆக்ரோயா ஆற்றின் ஓரத்தில் காணப்படும் புற்தரையில் (04) அன்று மதியம் சுமார் மூன்று அடி நீளமான உயிரிழந்த நிலையில் சிறுத்தை சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக டயகம பொலிஸார் தெரிவித்தனர்
பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்தே குறித்த சிறுத்தை சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்த சிறுத்தை விஷ உணவு உட் கொண்டு உயிரிழந்துள்ளதா அல்லது எவரேனும் கொன்றுவிட்டனரா? என்பது தொடர்பாக டயகம பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இதன் உடலில் காயங்களும் காணப்படுகின்றது.
குறித்த சிறுத்தையின் சடலத்தை நுவரெலியா வனஜீவராசிகள் எடுத்து சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
–க.கிஷாந்தன்-
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1