ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘திட்டம் இரண்டு’ திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். ‘காக்க முட்டை’ படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த இவர், தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிசியாக நடித்து வருகிறார். இவர் நடித்த கானா, க/பெ ரணசிங்கம் போன்ற படங்கள் அனைவரின் வரவேற்பையும் பெற்றது. தற்போது ‘துருவ நட்சத்திரம்’, ‘இது வேதாளம் சொல்லும் கதை’, ‘இடம் பொருள் ஏவல்’ உள்ளிட்ட ஒரு டஜன் படங்களை கைவசம் வைத்துள்ளார்.
தற்போது ‘திட்டம் இரண்டு’ என்ற த்ரில்லர் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். குறும்பட இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இயக்கும் இப்படத்தின் ஃப்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தினேஷ் கண்ணன் மற்றும் வினோத் குமார் ஆகிய இருவரும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். சதீஷ் ரகுநாதன் இசையமைப்பாளராகவும், கோகுல் பினாய் ஒளிப்பதிவாளராக இப்படத்தில் பணிபுரிந்துள்ளனர்.
இந்த படத்தின் தயாரிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்நிலையில் ‘திட்டம் இரண்டு’ திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நெட்பிளிக்ஸ் ஓடிடித்தளத்தில் வெளியாகும் இப்படத்தின் ரிலீஸ் திகதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.